தேனியில் குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு..!
தேனி மாவட்டத்தில் குரங்கு அம்மை பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 35 வயதான பரிமளா என்ற பெண்ணிற்கு கடந்த மாதம் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 15 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த பரிமளா, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 18ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments