தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடக்கம்.. ஆம்னி பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம்.!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அனைத்து வழித்தடங்களுக்கும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இனிவரும் விழாக் காலங்களில் இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கான அரசு பேருந்து முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன. அக்டோபர் 21ம் தேதி பயணிக்க திட்டமிடுவோர் இணையதளத்தில் இன்று முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments