27ஆம் தேதி முதல் நேரலை செய்யப்படும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைகள்
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை அனைத்தும் வரும் 27ம் தேதி முதல் நேரலை செய்யப்படவுள்ளன.
தலைமை நீதிபதியாக யுயு லலித் பதவியேற்ற பிறகு நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில், முதலில் அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணையும், அதன்பிறகு அனைத்து அமர்வுகளின் விசாரணைகளையும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட விவகாரம், முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும், அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளன.
நேரலை நடைமுறைக்கு வருவதன் மூலம், இனி அந்த விசாரணையை மக்களால் நேரில் காண முடியும்.
Comments