ஜி.பி முத்துவுடன் அதிவேக, அஜாக்கிரதை பயணம் - டி.டி.எப் வாசன் மீது பாய்ந்தது வழக்கு
கோவையில் யூடியூப் நடத்தி வரும் டி டி எஃப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் தேதி டிடிஎஃப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் youtube ஜிபி முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து பாலக்காடு மெயின் ரோடு எம்டிஎஸ் பேக்கரி அருகே அதி வேகமாக ஓட்டியுள்ளார்.
மேலும் இதனை பதிவு செய்து அவரது Twin Throttlers youtube சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டார். இது சம்பந்தமாக காவல்துறையினர் டி.டி.எப் வாசன் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments