எந்த வகுப்பினர், தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர்.. சிபிஎஸ்சி பள்ளியின் கேள்வித்தாளில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை..!
மும்பை மாகாணத்தில் எந்த ஜாதி, தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்டனர் என சிபிஎஸ்சி பருவதேர்வில் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா என்ற சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற பருவத்தேர்வில், சமூக அறிவியல் பாடப்பிரிவின் கேள்வித்தாளில் இந்த கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதால் இதற்கு விளக்கமளித்துள்ள பள்ளி நிர்வாகம், பாடத்திட்டத்தில் இருந்தே இந்த கேள்வி கேட்கப்பட்டதாகவும், இதுபோன்ற தவறு இனிவரும் நாட்களில் நடைபெறாது என்றும் உறுதி அளித்துள்ளது.
Comments