கூகுள் நிறுவனத்திடமிருந்து தவறுதலாக வந்த சுமார் 2 கோடி ரூபாய்.. பணத்தை பெற்றவர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டதால் ஆச்சரியம்..!
அமெரிக்காவில் கூகுள் நிறுவனம் தவறுதலாக வெளிநபர் ஒருவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது.
கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் கெர்ரி என்ற நபரின் வங்கி கணக்கில், கூகுள் நிறுவனத்திடமிருந்து 2 லட்சத்து 50 டாலர்கள் பணம் வந்தது.
இதனை கண்டு ஆச்சரியமடைந்த கெர்ரி, தனக்கு கூகுள் நிறுவனம் ஏன் பணம் அனுப்பியது என்று தெரியவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டார்.
இதுவரை தன்னை கூகுள் நிறுவனத்தை சேர்ந்த எவரும் தொடர்புகொள்ளவில்லை என்றும், பணத்தை திரும்ப பெற கூகுள் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லையென்றால் சந்தோஷம் தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த பணம் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதனை திரும்ப பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூகுள் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Comments