தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும் - ஆளுநரை சந்தித்த பின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர்.
கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற சந்திப்பில், தேசியக் கல்விக் கொள்கை, தமிழக அரசியல் சூழல் குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கி வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர், டி.டி.கே. சாலையில் காந்தியடிகள் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்திய தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும் என்றும் கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதற்கு முறையான காரணங்கள் ஏதும் இல்லை என்றும் கூறினார்.
Comments