கிரிக்கெட் ஆடலாம்.. கபடி ஆடலாம்.. ஆலமரத்தில ஆடலாமா..? 2 காலும் முறிஞ்சு போச்சு..!

0 2880
கிரிக்கெட் ஆடலாம்.. கபடி ஆடலாம்.. ஆலமரத்தில ஆடலாமா..? 2 காலும் முறிஞ்சு போச்சு..!

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் முனீஸ்வரன் வந்திருப்பதாக கூறி ஆலமரத்தின் மீது ஏறி நின்று இறங்க மறுத்து சாமி ஆட்டம் போட்டவர் தவறி விழுந்து  2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் கடந்த எட்டு மாதங்களாக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் தன் மீது முனீஸ்வரன் இறங்கி உள்ளதாக கூறிக்கொண்டு ஆலமரத்துக்கு அடியில் சாமி ஆடி தானாக முன்வந்து குறி சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் ஆலமரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஜெயராஜ் தன் மீது முனீஸ்வரன் வந்திருப்பதாக கூறி மரத்தில் நின்று ஆடி உள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதிவாசிகள் கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தியும் அவர் இறங்கி வர மறுத்து ஆலமரத்தில் ஒவ்வொரு கிளையாக தாவி சாமி ஆடிஉள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல் துறையினர் அழைத்தும் அவர் இறங்கி வர மறுத்தார். அவர் கீழே விழுந்து விடக்கூடாது என்று தீயணைப்பு வீரர்களை வரவழைத்து அவர்கள் உதவியுடன் ஏணியை வைத்து திடீர் சாமியாடி ஜெய ராஜை கீழே இறக்க முயன்றனர்.

ஆனால் இறங்கி வர மறுத்த அடம்பிடித்து அவர் மரக்கிளையில் நின்றபடி தாவித்தாவி குதித்து சாமி ஆடிய போது தவறி கீழே பொத்தென்று விழுந்தார்.

இதில் ஜெயராஜின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் எழுந்து நடக்க இயலவில்லை. வலியால் கதறி துடித்த அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிக்கெட் ஆடலாம், கபடி ஆடலாம், ஆலமரத்தில் ஏறி தாவி தாவி சாமி ஆடினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments