டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்? இபிஎஸ் விளக்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாகவும், போதைப்பொருள் விற்பனை அதிகரித்து விட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்ததாக, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற அவர், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதையும், போதைப்பொருள் விற்பனை அதிகரித்து விட்டதையும் உள்துறை அமைச்சரிடம் தாங்கள் எடுத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோதாவரி - காவிரி இணைப்பு, நடந்தாய் வாழி காவேரி ஆகிய திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு , உள்துறை அமைச்சரிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி அப்போது குறிப்பிட்டார்.
Comments