திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம்.. கணவரை கைது செய்த போலீசார்!

0 2627

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

மனோஜ் - அபிராமி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணமானது. அபிராமி 2 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஜூலை 30ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தற்கொலைக்கு முன் அபிராமி பேசிய ஆடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றினர் அதில், மனோஜின் தாய் மற்றும் பாட்டி தங்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள், மனோஜும் தன்னுடன் சண்டையிடுவதால், இந்த முடிவை தேடி கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

மனோஜை கைது செய்த போலீசார், மாமியார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments