வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார்

0 2359
வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார்

செங்கல்பட்டு அருகே மருத்துவரின் ஆலோசனையின் படி வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மனைவி புஷ்பா, பிரசவ வலி காரணமாக இல்லிடு அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செய்வதறியாது தவித்த செவிலியர்கள், மருத்துவரின் ஆலோசனையின் படி வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர்.

குழந்தையின் தலை மட்டும் வெளியே வராததால் ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. பணிக்கு வராமல் மருத்துவர் வீடியோ கால் மூலம் செவிலியர்களிடம் பேசி பிரசவம் பார்த்ததாக சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments