மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு, லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இறுதி சடங்குகள்

0 3022
மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு, லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இறுதி சடங்குகள்

மறைந்த பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு, லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. 

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத், தனது 96வது வயதில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல், லண்டன் கொண்டு வரப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர், அங்கிருந்து இன்று பீரங்கி வண்டியில் ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி, வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சவப்பெட்டி பேழை மீது வைரம் பொறித்த கிரிடம், செங்கோல் வைக்கப்பட்டிருந்தது. அந்த அணிவகுப்பு நிகழ்வில் மன்னர் 3ஆம் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தேவாலயத்தில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பிரார்த்தனையின் முடிவாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது

இதன் பின்னர், அவரது உடல் லண்டன் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகே உள்ள வெலிங்க்டன் ஆர்ச்சிற்கு எடுத்து செல்லப்பட்டது. மன்னர் சார்லசும், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் உடன் சென்றனர்.

இறுதியாக, ராணியின் உடல் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிரார்த்தனை முடிந்த உடன், ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விண்ட்சர் கோட்டையின் தரைக்கு கீழ் உள்ள ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்படும். கணவர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அருகே ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments