புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை.. கைகளை வைத்து சுரண்டினாலே பெயர்ந்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு.!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, கைகளை வைத்து சுரண்டினாலே பெயர்ந்து வரும் அளவுக்கு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோட்டையூர் சக்தி நகரில் மத்திய அரசின் நபார்டு திட்டத்தின்கீழ் 2.93 கோடி ரூபாய் செலவில், மாநில அரசால் 15 நாள்களுக்கு முன்பு சாலை போடப்பட்டது.
தார் சாலை அமைக்கும்பணி நடைபெற்றபோது, தரமற்ற முறையில் போடப்படுவதாக பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை என்று பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாண்டித்துரை குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஒப்பந்ததாரரின் பதிலை அறிய அவருடைய செல்போன் எண்ணை அழைத்தபோது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Comments