மகனின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தின் மூலம் லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்.!
கேரளாவில், மகனின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தின் மூலம் லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு 25 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீ வராகம் பகுதியைச் சேர்ந்தவர் அனூப். ஆட்டோ ஓட்டுனரான இவர் கேரள அரசின் திருவோண பண்டிகை லாட்டரி சீட்டினை நேற்று முன்தினம் வாங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற லாட்டரி சீட்டிற்கான குலுக்கலில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அனூப்பிற்கு கிடைத்துள்ளது.
பல்வேறு வரிகளுக்கான பிடித்தம் தவிர ரொக்கமாக கையில் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடன் சுமையால் சமையல்காரர் வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஓணம் பம்பரால் அனூப் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்.
Comments