தென்கிழக்கு தைவானில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 146 பேர் காயம்!
தென்கிழக்கு தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 146 பேர் காயமடைந்துள்ளனர்.
7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், யூலி நகரில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், சாலைகள், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தலைநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
Comments