பெண்ணின் வயிற்றில் இருந்து 55 உருளை ரக பேட்டரிகள் அகற்றம்..!
வடமேற்கு ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 55 உருளை ரக பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் 66 வயதான பெண் ஒருவர், கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரின் வயிற்றில் ஏராளமான உருளை ரக டபுள் ஏ மற்றும் ட்ரிபிள் ஏ பேட்டரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதிக எண்ணிக்கையில் பேட்டரிகளை விழுங்கிவிட்டதாக கூறியதை கேட்டு வியந்து போன மருத்துவர்கள், லேபரோடமி அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிறு மற்றும் குடலில் இருந்து பேட்டரிகளை அகற்றினர்.
Comments