ஆபாச வீடியோ - மாணவியும் சிம்லா காதலனும் கைது

0 4602

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாச வீடியோவை காதலனுக்கு அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

60 க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்களை சக மாணவியே படம் எடுத்து தனது காதலனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுவது வெறும் புரளிதான் என்றும் ஆறேழு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் சண்டிகர் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அமைதி காக்கும்படியும் விரிவான விசாரணை நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆயினும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து நள்ளிரவில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனிடையே சண்டிகரில் இருந்து சிம்லா சென்ற போலீஸ் குழு ஒன்று அங்கு காவலில் வைக்கப்பட்டு இருந்த சன்னிமேத்தா என்ற வாலிபரை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து சண்டிகர் அழைத்துச் சென்றனர்.அவர் நண்பர் ஒருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments