ராணி எலிசபெத் - உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி

0 3090

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் நல்லடக்கம் இன்று ராஜ மரியாதையுடன் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி காலமானார். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த 4 நாட்களாக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் ராணியின் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் லண்டனில் முக்கிய வீதிகள் வழியாக ராணியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். 200 இசைக்கலைஞர்கள், பேண்டு வாத்தியக் குழுவினர உடன் செல்வார்கள்.

மன்னர் சார்லஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கின்றனர். கிறித்துவ மதத்தலைவர்கள் சடங்குகளை நிறைவேற்றுவார்கள். சவப்பெட்டியில் உடல் வைத்து மூடப்படும் முன்பு இறுதியாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் . இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில் விமானங்களின் இரைச்சலைத் தடுக்க சிறிது நேரம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணியின் விருப்பப்படி, கடந்தாண்டு இறந்த அவருடைய கணவர் பிலிப்பின் உடலுக்கு அருகே ராணியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாட்டு மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரம் பேர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். உலகத் தலைவர்களின் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் லண்டன் முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், மக்களும் பங்கேற்பதற்காக இங்கிலாந்து முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. லண்டன் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சுமார் 125 திரைகளில் இறுதிச் சடங்கு நேரலையாக ஒளிபரப்பப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அதிகளவில் மக்கள் திரண்டு வரக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments