மாணவிகளின் குளியல் வீடியோவை ஆன்லைனில் கசிய விட்டதாக சண்டிகர் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் போராட்டம்
மாணவிகளின் குளியல் வீடியோ ஆன்லைனில் கசிய விடப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்த சண்டிகர் பல்கலைக்கழகம், 10 மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் குளியல் வீடியோவை சக மாணவியே ரகசியமாக எடுத்து ஆன்லைனில் வெளியிட்டதாக கூறி, மொகாலி உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தில் மாணவி ஒருவரை கைது செய்த போலீசார், குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவி தனது வீடியோவை தான் ஆண் நண்பருக்கு அனுப்பியதாக விளக்கமளித்தனர். மேலும், ஏராளமான மாணவிகள், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுவதையும் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
Comments