பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி வாடும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருக்கு உதவித் தொகை மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெயகுமாரி.
70 வயதாகும் அவர், கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, கிட்னி 50 சதவீதம் செயலிழந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மழுத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments