செல்போனுக்காக பெண்ணை சுட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

0 2102
செல்போனுக்காக பெண்ணை சுட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

பீகாரில் செல்போனுக்காக பெண்ணை சுட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரைச் சேர்ந்தவர் பேபி தேவி. தனது மகனுடன் பூக்கள்ப் பறிக்கச் சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் தேவியிடமிருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.

போலீஸ் ரோந்து வாகனம் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் தேவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். ஆபத்தான நிலையில் அப்பெண்னை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments