தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை
தைவானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைடுங் நகருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், யூலி நகரில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. தலைநகர் தைபேயிலும் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், சேத விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.
இந்நிலையில், தைவான் கடற்கரையோரங்களில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments