தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 21 மற்றும் 22ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments