கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து - 7 பேர் பலி

0 2500

ஜார்கண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஹசாரிபாக் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராஞ்சி நோக்கிச் சென்ற பேருந்து, தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்று பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், சிலர் பலத்த காயம் அடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments