அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் 11 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்தின் அதிகாரிகள் பலரை அவர் சந்திக்கவுள்ளார். பிரேஸில், ஜப்பான், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்களுடனான ஜி4 கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது தொடர்பான எல்.69 கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
வாஷிங்டன் நகரில் செப்டம்பர் 25 முதல் 28-ந்தேதி வரை பயணம் மேற்கொள்ளும் அவர், அங்கு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து பேசவுள்ளார்.
Comments