ஹவுராவில் இருந்து புவனேசுவர் வந்த ஜன சதாப்தி அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!
ஹவுராவில் இருந்து புவனேசுவர் வந்த ஜன சதாப்தி அதிவிரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பட்ரக் ரயில் நிலைய யார்டு அருகே தடம் புரண்டது. ரயிலின் குறுக்கே காளை மாடு ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது.
மாடு மீது மோதி ரயிலின் இரண்டாவது பெட்டி தடம் புரண்டது. ஆயினும் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து தடம் புரண்ட பெட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Comments