பார்பிகுயின் ஓட்டலில் மட்டமான மட்டன் கிரேவி.. 5 கிலோ அழுகிய இறைச்சி..! வீணா போன பிரியாணி பறிமுதல்.!
யூடியூப் உணவுப் பிரியர்களால் புகழப்பட்ட சேலம் பார்பி குயின் ஓட்டலில் கெட்டுபோன மட்டன் கிரேவி வழங்கப்பட்டதால் ஓட்டல் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தொடர்ந்து கெட்டுபோன மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்...
இந்த யூடியூப்பர், அந்த யூடியூப்பர் என்ற பேதமில்லாமல் பலரும் விரும்பி சென்று ருசித்து வித விதமாக வீடியோ பதிவிட்டதால் இளையதலைமுறையினர் மத்தியில் ஓகோவென்று பேமஸான உணவகம் சேலம் பார்ப்பிக்குயின் ஓட்டல் இது தான் ..!
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள இந்த பார்பி குயின் ஓட்டலில் சபரி என்ற வாடிக்கையாளர், மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி பணம் கொடுத்து வாங்கிச் சென்று உள்ளார். வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது , மட்டன் கிரேவி கெட்டுப் போன நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அந்த உணவை எடுத்துக்கொண்டு உணவகத்திற்கு வந்து திருப்பி கொடுத்துள்ளார். அதனை திறந்து பார்த்த ஊழியர் அது கெட்டுபோயிருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அங்கு வந்த மேலாளரிடம் தெரிவித்த போது அவர் கெட்டு போயிருந்தால் கீழே ஊற்றி விடுங்கள் என்று மெத்தனமாக கூறியதால் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கெட்டுபோன இறைச்சியில் செய்யப்பட்ட கிரேவியை கொடுத்து விட்டு , அலட்சியமாக பதில் சொன்ன பார்பிகுயின் நிர்வாகத்துக்கு எதிராக ஓங்கி குரல் எழுப்பினார் சபரி
சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சபரி உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த ஓட்டலின் சமையல் அறைக்குள் நுழைத்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர் . அங்கிருந்து கெட்டு துர்நாற்றம் வீசிய 5 கிலோ எடையுள்ள மட்டன் மற்றும் சிக்கன் இறைச்சிகளை கைப்பற்றினர்
வீணாப்போன பிரியாணியையும், சவர்மா மற்றும் கிரில் சிக்கனுடன் சேர்த்து வழங்குவதற்காக பல நாட்களுக்கு முன்பு போடப்பட்ட கெட்டுபோன மைதா ரொட்டிகளையும் கைப்பற்றி அழித்தனர்
காலாவதி தேதி ஏதும் குறிப்பிடாத மசாலா பொருட்களையும் அங்கிருந்து பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளதோடு, பார்பிகுயின் ஓட்டல் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். அபராதம் குதித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்
உணவகங்கள் குறைபட்சம் மனசாட்சியோடு நடந்து கொள்ள மறுத்தால் கெட்டுபோன உணவுகளை சாப்பிடும் வாடிக்கையாளருக்கு புட்பாய்சன் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
Comments