105 திருட்டு செல்போன்களை சாமர்த்தியமாக மீட்ட திண்டுக்கல் போலீஸ்
திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கிவர்களிடம் இருந்து IMEI எண்களை பயன்படுத்தி 105 செல்போன்களை மீட்ட போலீசார் அதனை பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். செல்போன் களவு போனால் காவல் நிலையம் பக்கம் வராதீர்கள் என்று சொல்லும் காவலர்கள் மத்தியில் திண்டுக்கல் எஸ்.பி .பாஸ்கரனின் சிறப்பான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
செல்போன் தொலைந்தாலோ.. களவுபோனாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரக்கூடாது என்று அடித்து விரட்டாத குறையாக புகார் தாரர்களை பெரும்பாலான காவல் நிலைய போலீசார் திருப்பி அனுப்புவது வாடிக்கை.
செல்போன்கள் களவு போனால் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க அனுப்பப்படும் நிலையில், அங்கு, செல்போன்களை மீட்டுக் கொடுப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று செல்போன்களை பறிகொடுத்தவர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போல செல்போன்கள் யார் கையில் உள்ளன என்பதை செல்போன்களில் உள்ள IMEI எண்களை கொண்டு விரைந்து கண்டு பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். மாவட்ட சைபர் கிரைம் போலீசார் , திருட்டு செல்போன்களை பயன் படுத்தியவர்களிடம் இருந்து செல்போன் வேட்டையை தொடங்கினர்.
போலீஸ் விசாரணையில் போது சிலர் செல்போன்களை கீழே கண்டு எடுத்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர். பலர் குறைந்த விலைக்கு வாங்கியதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் தாங்கள் வைத்திருப்பது திருட்டு செல்போன் என்றும் இதனை பயன்படுத்துவது குற்றம் என்பதையும் போலீசார் எடுத்து கூறினர். செல்போனை தந்து விட்டால் வழக்கும், கைது நடவடிக்கையும் இல்லை என்று கூறியதும் விட்டால் போதும் என்று பலரும் தங்கள் கையில் இருந்த அடுத்தவர்களின் செல்போன்களை கொடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.
Comments