“இந்தி தெரியாதெனில் இந்தியரே இல்லை என்ற எண்ணம் நன்மை பயக்காது” - நிர்மலா சீதாராமன்
”இந்தி தெரியாதெனில் இந்தியரே இல்லை என்ற எண்ணம் வணிக நோக்கத்திற்கு நன்மை பயக்காது” என்று மும்பையில் நடந்த இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
அனைத்து வங்கிகளிலும் உள்ளூர் மொழியில் பேசக்கூடிய ஊழியர்களை நியமிக்க வேண்டுமெனவும் உள்ளூர் மொழியில் பேசத் தெரியாதவர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடும் பொறுப்பில் நியமிக்கப்படக்கூடாது என கேட்டுக் கொண்ட அவர், நீங்கள் வணிகம் செய்வதற்காக இருக்கிறீர்களே தவிற மதிப்பு முறையை வளர்க்க அல்ல” என்றும் தேசத்தின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் மொழியில் பேசக்கூடிய பணியாளர்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
Comments