சுங்கச் சாவடியில் இருமடங்கு கட்டணம் கேட்டதால் தகராறு.. இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் 7 பேர் படுகாயம்!

0 2812

கேரள மாநிலம் திருச்சூரில் இருமடங்கு கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், சுங்கச் சாவடி ஊழியர்களும் காரில் வந்தவர்களும் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

கோயம்புத்தூரில் இருந்து திருச்சூர் நோக்கி சென்ற கார் பாலியேக்கரை சுங்க சாவடியை கடக்க வந்த போது, தொழில் நுட்ப  கோளாறு காரணமாக fast tag-ல் இருந்த பேலன்ஸ் காண்பிக்காததாக கூறப்படுகிறது.

அதனால் சுங்கச் சாவடி ஊழியர்கள் இருமடங்கு கட்டணத்தை செலுத்த கூறியதால் இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிகொண்டனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments