திருமணமான 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை?

0 2763
திருமணமான 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை?

கும்பகோணம் அருகே திருமணமான 7 மாதத்தில் மூன்று மாத கர்ப்பிணி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணனுக்கும் அபிநயா என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. 3 மாத கர்ப்பிணியாக இருந்த அபிநயா வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாக சரவணன், அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அபிநயா சடலமாக கிடந்ததைக் கண்டு கதறியழுத பெற்றோர், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கூடுதல் வரதட்சணைக் கேட்டு சரவணன் வீட்டார் மகளை கொலை செய்து விட்டதாகவும் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதற்கிடையே போதையில் தவறிவிழுந்து விட்டதாக சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments