மன்னர் சார்லஸ் கார் அணிவகுப்பை நோக்கி ஸ்கேட்டிங் செய்தபடி வேகமாக வந்த இளைஞரை மடக்கிப் பிடித்த போலீசார்
லண்டனில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கார் அணிவகுப்பை நோக்கி ஸ்கேட்டிங் செய்தபடி வேகமாக வந்த இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள 2ம் எலிசபெத் ராணியின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலை நோக்கி இளவரசி அனி உள்ளிட்டோருடன் சார்லஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த இளைஞரை சட்டென மடக்கிப் பிடித்து போலீசார் கைவிலங்கிட்டனர்.
விசாரணையில் சாலையில் ஸ்கேட்டிங் செய்தபடி வந்ததாகவும், சார்லஸ் கார் வரும் என்பது தனக்கு தெரியாது என்றும் இளைஞர் தெரிவித்தார். இதையடுத்து அவரை இங்கிலாந்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Comments