ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் 4 நாட்களுக்கு பின் மீட்பு.!

0 9489

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் 4 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். பரதராமி தாசிராப்பல்லி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் கணக்காளராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 12-ந்தேதி முதல் தாமோதரனை காணவில்லை என அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

ஆந்திர மாநில எல்லையில் நெல்லுபட்லா என்ற இடத்தில் தாமோதரனை மீட்ட போலீசார், அவரை கடத்தி வைத்திருந்த சுரேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தராததால் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments