நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... இந்திய மாலுமிகள் உள்பட 19 பேரை பத்திரமாக மீட்ட கடலோரக் காவல்படை

0 2693

மும்பை அருகே ரத்தினகிரி கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 19 பேரை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

கபோன் செல்லும் கப்பல் 2 ஆயிரத்து 911 டன் Asphalt Bitumen கட்டுமானப் பொருளுடன்   மும்பையில் உள்ள புதிய மங்களூர் துறைமுகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலின் எத்தியோப்பிய கேப்டனுடன் 18 இந்தியர்கள் மாலுமிகளாக உள்ளனர்.

தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் இரண்டு கப்பல்கள் மற்றும் இலகு ரக ஹெலிகாப்டர்களுடன் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டனர் .மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 19 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments