ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து

0 8367

பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான பச்சிளம் குழந்தைகளுக்கான பவுடர் உரிமத்தை மகாராஷ்ட்ரா உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

பேபி பவுடர் மாதிரிகள் புனே மற்றும் நாசிக் ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்கப்பட்டதையடுத்து இந்த பவுடர் உயர் தரத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பவுடரைப் பயன்படுத்தினால் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சரும பாதிப்பு போன்றவை ஏற்படலாம் என்றும் குழந்தைகளின் உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால் தங்கள் தயாரிப்பு பொருட்கள் பாதுகாப்பானவை என்று ஜான்சன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments