பாகிஸ்தான் வெள்ளத்தில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கிறது - ஷபாஸ் ஷெரீப்
பருவநிலை மாற்றம் பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கச் செய்து நாடு கடல் போல காட்சியளிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். பருவநிலை மாற்றம், மேக வெடிப்பு மற்றும் அதிக அளவிலான பருவ மழையின் காரணத்தினால் பாகிஸ்தான் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் 1400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுள்ளனர்.
Comments