விஜய்க்கு அபராதம்: வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு.!

0 3184

புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு மீதான இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

வருமான வரித் துறை, புலி பட சம்பளத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்து, விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதையெதிர்த்து, விஜய் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து விசாரணையை அக்டோபர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY