சிறப்பாக பணியாற்றிய 548 காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.!
சென்னை பெருநகர காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த 548 காவலர்களுக்கு, தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். முன்னதாக, காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சங்கர் ஜிவால், சென்னையில் ஆயுதப்படை காவலர்களுக்கு செல்போன் செயலி மூலம் விண்ணப்பித்து இதுவரை 9,000 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments