"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மணிக்கு 143 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட சோதனை ஓட்ட ரெயிலின் இன்ஜின் பழுது.!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து ரேணிகுண்டாவிற்கு மணிக்கு 143 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இயக்கப்பட்ட சோதனை ஓட்ட ரெயிலில், இன்ஜின் பழுதானதால் மாற்று இன்ஜின் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
தெற்கு ரேயில்வே ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியாக இந்த சோதனை ஓட்ட ரெயில் ரேணிகுண்டாவிற்கு இயக்கப்பட்டது.
ஆனால், அரக்கோணத்தில் அந்த ரெயிலின் இன்ஜினில் பழுது ஏற்பட்டதால், மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு அந்த ரெயில் 4.25 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
எதிர்பார்க்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 143 கிலோ மீட்டர் வேகத்தை இந்த ரெயில், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே தொட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments