திமுக எம்பி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அசோக்நகர் காவல்நிலையத்தில் கவுன்சிலர் உமா ஆனந்த் புகார்..!
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா, இந்துக்களை அவமதித்து பேசியதாகவும், ஆதலால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி, சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மாநகராட்சி 134 வது வார்டு பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்த் புகார் அளித்துள்ளார்.
Comments