ராகுல் காந்தியின் நடைப் பயணத்திற்காக காய்கறி வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய காங்கிரஸ் கட்சியினர்.!

0 2909

கேரளாவின் கொல்லத்தில் ராகுல் காந்தியின் "ஒற்றுமை இந்தியா” நடைப் பயணத்திற்காக காய்கறி வியாபாரியிடம் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுலின்  நடைபயணத்திற்காக காங்கிரசார் 2000 ரூபாய் கேட்டதாகவும், அதற்கு 500 ரூபாய் தருவதாக வியாபாரி கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வியாபாரி, காங்கிரசார் ஆகிய இரு தரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் , தவறு செய்த 3 பேரையும்  கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் அறிவித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments