யாராவது உதவ முடியுமா ? காதில் இயர்போனை மாட்டத்தெரியாமல் தடுமாறிய பாகிஸ்தான் பிரதமர்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கும் போது இயர்போனை காதில் மாட்டத்தெரியாததால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனது காதில் இயர்போனை மாட்டத்தெரியாமல் சிறிது நேரம் தடுமாறிய ஷெரீப், தனக்கு யாராவது உதவ முடியுமா ? என்று கேட்டார். இதனையடுத்து அங்கிருந்த அதிகாரி ஒருவர் ஷெரீப்பின் காதில் இயர்போனை பொருத்தியநிலையில், அவர் பேசத் தொடங்கியதும் இயர்போன் மீண்டும் கீழே விழுந்தது.
இதனை பார்த்துக்கொண்டிருந்த புடின் சிரித்துக்கொண்டே தனது காதில் இருந்த இயர்போனை எடுத்து வேடிக்கையாக பார்த்தார்.
Comments