தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 19 மற்றும் 20ம் தேதிகளில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments