கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் மேல்சபையில் நிறைவேறியது.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!
கர்நாடக சட்டசபையின் மேல் சபையில் மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கட்டாய மதமாற்றம் செய்யப்படாமல் மக்களைப் பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் தனது மதத்தைத் தேர்வு செய்கிற சுதந்திரத்தை இச்சட்டம் மறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்தாண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது பாஜகவுக்கு மேலவையில் தோல்வியடைந்தது.
இந்த முறை எம்.எல்.சி தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு எண்ணிக்கை கூடியதால் மீண்டும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments