"சூரியனின் உண்மையான நிறம் வெண்மை தான்" - நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர்!
"சூரியனின் உண்மையான நிறம் வெண்மை தான்" என்றும், அது பூமியில் இருந்து பார்க்கும் போது மஞ்சளாக இருப்பதன் காரணம் நமது வளிமண்டலம் தான் என்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார்.
சூரிய ஒளிக்கற்றையில் இருந்து வரும் அனைத்து நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாகத் தான் தோற்றமளிக்கும். விண்வெளியில் சூரியனைப் படம் எடுக்கும் போது, அது வெண்மையாகத் தான் இருக்கிறது என்றும், பூமியில் மஞ்சளாக இருப்பதற்கு நமது வளிமண்டலம் தான் காரணம் என்றும், நீண்ட அலைவரிசை ஒளியான சிவப்பால் தான் மஞ்சளாக தெரிகிறது என்றும் "Latest in space" என்ற அறிவியல் பக்கம் இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.
இந்தப் பதிவவை, ஸ்காட் கெல்லி "இது உண்மைதான்" என குறிப்பிட்டதை தொடர்ந்து இப்பதிவு வைரலானது.
Comments