பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உணவுத் தட்டு!

0 2593

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி உணவகம் ஒன்று '56 வகை உணவை' அறிமுகம் செய்ய உள்ளது.

கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் பெரிய தட்டில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த சைவ அசைவ உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடலாம்.

தட்டு நிறைய உணவை எடுத்து 40 நிமிடங்களில் முதல் முறை காலிசெய்பவருக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

17 முதல் 26ம் தேதி வரை சிறப்பு உணவுத் தட்டை வாங்கி உணவை உண்ணும் ஒரு தம்பதிக்கு குலுக்கல் மூலம் பரிசாக கேதார் நாத் செல்லும் பயணச் சீட்டு வழங்கப்படும் என்றும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments