பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை

0 2595

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான்  சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஈரான் அதிபர்களுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு சமர்கண்ட் நகரைச் சென்றடைந்தார். பல்வேறு நாடுகளின் தலைவர்களை வரவேற்கும் வகையில் கண்கவரும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கச்சா எண்ணெய் , மின் பகிர்வு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல் ஈரான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்துவதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments