ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர், திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த ராணியின் உடல் நேற்று பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு காவலர்கள் முழு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு நின்றிருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அவருக்கு உதவிய காணொலி இணையத்தில் பரவி வருகிறது.
Comments