வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ; 431 கிலோ தங்கம், வெள்ளி பறிமுதல்
வங்கியில் 2 ஆயிரத்து 296 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி 431 கிலோ தங்கம், வெள்ளியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பாரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராக 2018ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே 205 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்துடன் தொடர்புடைய ரக்சா புல்லியன் மற்றும் கிளாசிக் மார்பில்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
அப்போது 2 ரகசிய லாக்கர்களில் 91 புள்ளி 5 கிலோ தங்கமும், 152 வெள்ளியும், அலுவலக வளாகத்தில் 188 கிலோ வெள்ளியும் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு 47 கோடியே 76 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments