முன்னாள் கனிம வளத்துறை இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை.!
தருமபுரியில் முன்னாள் கனிம வளத்துறை இணை இயக்குனர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கனிம வளத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் மீது, ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தருமபுரி சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments